நிறைய இளம் பெண்களின் முகத்தில் இருக்கும் குழிகளை மறைப்பது பாரிய பிரச்சியையாக உருவெடுத்துள்ளது.இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து கிரீம்களை பயன்படுத்துகின்றார்கள்.
எனினும் நல்ல மாற்றத்தினை உணர முடியாது உள்ளது. இதற்கு இயற்கை வழியில் தீர்வு இருக்கின்றது. ஒரே நாளில் நல்ல ஒரு மாற்றத்தினை உணர முடியும்.
சிலரது முகத்தில் குழிகள் அதிகம் காணப்படும். முகத்தில் குழிகள் இருந்தால், அவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம் வருதற்கு வழிவகுக்கும். மேலும் யாருக்கு முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதோ, அவர்களது முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அழுக்குகளும் அதிகம் சேரும்.
அதற்காக கவலைப்பட வேண்டாம். இப்பிரச்சனை இருந்தால், அதனை ஒருசில ஃபேஸ் மாஸ்க்குகள் மூலம் சரிசெய்யலாம். அந்த ஃபேஸ் மாஸ்க்குகளைப் போட்டால், முகத்தில் உள்ள குழிகள் மறைவதோடு, முகத்தின் பொலிவும் அதிகரிக்கும். சரி, இப்போது முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைய வைக்கும் அந்த ஃபேஸ் மாஸ்க்குகள் என்னவென்று பார்ப்போம்.