தனுசு ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சி அடைந்திருக்கிறார், ஏற்கனவே புதன் மற்றும் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் மூன்று கிரகங்களின் சேர்க்கை உண்டாகியுள்ளது.

இதனால் மற்ற ராசியினருக்கு அதிர்ஷ்டமும், சஞ்சடங்களும் உருவாகலாம். இந்த பதிவில் மார்கழி மாதத்துக்கு ராசிபலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதத்தில் எதையும் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும், பணவரவு அதிகரிப்பதுடன் கொடுத்த காரியத்தை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

தொழிலில் முன்னேற்றம் இருந்தாலும் உடல்நலத் தொந்தரவுகளினால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சமூகநலன் சார்ந்த விடயங்களில் ஈடுபட்டு புண்ணியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். மகத்துவம் தரும் மார்கழி மாத ராசிபலன்கள்

ரிஷப ராசி அன்பர்களே, எந்தவொரு காரியத்தையும் தொடங்கும் முன் பலமுறை யோசித்து முடிவெடுங்கள், சுக்கிரனின் சஞ்சாரத்தால் ஆரோக்கியமாக இருப்பீர்கள். தொழில் வியாபாரத்திலும், அலுவலக பணிகளிலும் மந்த நிலை இருக்கலாம். சனி பகவானை தரிசித்து வருவது கஷ்டங்களை நீக்கிவிடும்.

மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் சுதந்திரமாக செயல்படும் நீங்கள், நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ஆற்றலுடன் இருப்பீர்கள். தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் உண்டாகும், வீடு தொடர்பான வேலைகள் முடிவடையலாம், குடும்பத்தில் சந்தோஷம் இருந்தாலும் எதிர்பாராத வீண்விரைய செலவுகள் வரலாம். முருகனுக்கு தீபம் ஏற்ற கந்தசஷ்டி கவசம் படிப்பது நன்மையை தரும். மகத்துவம் தரும் மார்கழி மாத ராசிபலன்கள்

கடக ராசி அன்பர்களே, குரு பகவானின் அருள் இருப்பதால் எதிலும் லாபம் கிடைக்கும். வீண் கவலைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும், தொழில் ரீதியான தடங்கல்கள் நீங்கும். வாகனம், வீடு என சொத்து ரீதியான பிரச்சனைகள் சரியாகும், புது வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அங்காளம்மன் கோவிலுக்கு சென்றுவருவது நல்லது.

சிம்ம ராசி அன்பர்களே, உங்களின் மனதுக்கு பிடித்தமான சம்பவங்கள் இடம்பெறும் மாதம் இதுவாகும்.இதுவரை தடங்கலாக இருந்த காரியங்கள் நிறைவேறலாம், தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தினமும் சூரிய பகவானை தரிசித்து வருவதால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். மகத்துவம் தரும் மார்கழி மாத ராசிபலன்கள்

கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசி குருவை பார்ப்பதால் காரியத்தை திட்டமிட்டு முடிப்பீர்கள், எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரியான திட்டமிடலுடன் கடந்து செல்வீர்கள். மங்களகரமான காரியங்கள் சுலமாக கைகூடும், புது வேலையை தேடும் நபர்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கி பிள்ளைகளின் கல்வியும் மேம்படும். ஆஞ்சநேயரை வணங்கி வருவது நல்லது.

துலாம் ராசி அன்பர்களே, காரியங்களில் அவசரம் காட்டாமல் பொறுமையாக யோசித்து செயல்படுவது நன்மையை தரும்.
வாகனங்களில் செல்லும் போது கவனமுடன் இருக்கவும், புதிதாக வேலைக்கு எதுவும் முயற்சிக்க வேண்டாம், சில நேரங்களில் தோல்விகள் வந்து சேரலாம். எந்தவொரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் பலமுறை யோசித்து செயல்படுவதே சிறந்தது. சரபேஸ்வரரை வணங்கி வருவது மன கவலையை நீக்கும். மகத்துவம் தரும் மார்கழி மாத ராசிபலன்கள்

விருச்சிக ராசி அன்பர்களே, மனதில் குடிகொண்டிருந்த கவலைகள் நீங்கி ஆன்மீக ரீதியில் நாட்டம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த சிக்கல்கள் நீங்க வாய்ப்புண்டு. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம், உங்கள் திறமையின் மூலம் நீங்கள் சாதிப்பீர்கள். துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள்.

தனுசு ராசி அன்பர்களே, தனசு ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் எடுத்த காரியத்தை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். பண பிரச்சனை விலகி, தொழிலில் முன்னேற்றம் இருக்கும், எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும்.நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் கொஞ்சம் சுதாரிப்புடன் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பில் பாராட்டுகள் கிடைக்கப்பெறலாம். பாலாம்பிகையை வணங்கி வர கடன் பிரச்சனைகள் நீங்கும். மகத்துவம் தரும் மார்கழி மாத ராசிபலன்கள்

மகர ராசி அன்பர்களே, நிதானமாக நடந்து கொள்வது நல்லது, எந்தவொரு விஷயமாக இருந்தாலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பயணங்கள் செல்கையில் வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை, உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். கோபத்தை குறைத்துவிட்டு எடுத்த காரியத்தை செய்து முடிக்க திட்டமிடுங்கள் உங்கள் முன்னோர்களை தினந்தோறும் வணங்கி வரவும்.

கும்ப ராசி அன்பர்களே, அனைத்து கிரகங்களும் சஞ்சரிப்பதால் மன தைரியத்துடன் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.தொழிலில் முன்னேற்றம் உண்டு, நெடுநாட்களாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் வரும், பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் வர வாய்ப்புகள் அதிகம். மகத்துவம் தரும் மார்கழி மாத ராசிபலன்கள்

மீன ராசி அன்பர்களே, குருவின் சஞ்சாரத்தால் தடைகள் நீங்குவதுடன் பணவரவு இருக்கும். புதிய உறவுகள் வந்து சேரலாம், உடல் ஆராக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் செயல்படவும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சென்றால் குடும்பத்தில் பிரச்சனைகள் வராது. 

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares