விஜய் டிவி என்று சொன்னவுடன் பலரின் நினைவுக்கு வருவது மைனா நந்தினி தான்.இவர் தனது எதார்த்தமான நடிப்பாலும் நகைச்சுவை பேச்சாலும் ரசிகர்களை கொள்ளை அடித்தவர்.கட்டாயம் இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தான் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
மைனா நந்தினி தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில் மைனாவின் கணவர் யோகேஷ் தனது மனைவியின் பிரமோஷனுக்காக அதிக பணம் செலவழித்ததாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை எனவும் புதிதாக வாங்கிய காருக்கு டீவ் கட்ட கூட தான் சிரமப்பட்டதாகவும், இரண்டு குடும்பங்களை கவனித்துக் கொள்ள சிரமப்பட்டு வரும் நிலையில் இதில் வேறு பெய்டு பிரமோஷனா என கூறி இருந்தார்.
இந்நிலையில் மைனாவின் முன்னாள் வாழ்க்கை பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதாவது மைனா நந்தினி கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் திருமணம் முடிந்த ஆறு மாதங்களில் இவர்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் அதனால் மனம் நொந்த கார்த்தி சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் நடிக்கும் நகைச்சுவை நடிகரான யோகேஸ்வரன் என்பவரை மயான நந்தினி திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது தனது குடும்பத்துடன் மைனா நந்தினி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.