பிக் பாஸ் வீட்டில் இருக்கும் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான அசீமை பற்றிய உண்மைகளை பிரபல தொகுப்பாளினியொருவர் புட்டுபுட்டு வைத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பாகி கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் பங்கேற்றுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து கடந்த சீசன்களுடன் இந்த சீசனை ஒப்பிட்டு பார்க்கையில், ஆரம்பத்தில் விறுவிறுப்பான நிலையில்லாமல் காணப்பட்டது. இதனை பல முறை கமல் வலியுறுத்திய போதும் மந்த நிலையே தொடர்ந்தது.
பிக்பாஸ் அசிம் மேலும் இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் பல முறை நாமினேஷனுக்கு சென்றுள்ளார்.
ஆனாலும் மக்கள் மத்தியில் இவருக்கு பலத்த ஆதரவு இருக்கின்றமையினால் எலிமினேட்டாகாமல் இன்று வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகிறார்.
மேலும் இவர் டைட்டில் வின்னராவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இவர் தொடர்பான சர்ச்சை பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அசீமுடன் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக சேர்ந்து தொகுத்து வழங்கிய பிரபல தொகுப்பாளனியான சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ பல சர்ச்சைக்குரிய பதிவுகளை பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
அதில் பிக் பாஸ் சீசன்6 போட்டியாளர்களை பற்றியும் பிக் பாஸ் தொகுப்பாளராக கமலஹாசன் பற்றியும் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.
அப்போது அசீமை பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். சமையல் மந்திரம் கிரிஜா அதில் அவர் கூறியுள்ளதாவது, அசீம் நினைப்பது போல ஆண் பெண் என்ற வேறுபாடுகள் எல்லாம் எப்போதோ போய்விட்டதுஅதில் அசீம் மிகவும் பின்தங்கி இருக்கிறார்.
மேலும் அசீம் நான் தான் இந்த பிக் பாஸ் வீட்டில் முதன்மையானவன் என்ற நினைப்பு அவரிடம் இருக்கிறது. அது தவறு கிடையாது, ஆனால் அது ஒரு எல்லையோடு இருக்க வேண்டும். அந்த எல்லையை தான்டி மற்றவர்களை அசிங்கப்படுத்தக் கூடாது.
சமையல் மந்திரம் கிரிஜா அசீமுடன் நான் ஏற்கனவே பணியாற்றியுள்ளேன் அதனால் எனக்கு அவரை பற்றி தெரியும்.
அசீமினால் பலரும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்றிருக்கின்றனர். மேலும் அவருடன் நடித்த பல நடிகைகள் அதிகமாக அழுதிருப்பதெல்லாம் நடந்திருக்கிறது. சீரியல்களில் கூட பல பிரச்சனைகள் வந்திருகின்றது என்று கிரிஜா கூறியுள்ளார்.