சென்னையில் குழந்தைகளுக்கு புதிதாக ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சல் குழந்தைகளுக்கு பரவாமல் தடுப்பது என்பது எப்படி என்பதை தற்போது பார்ப்போம். 
 
ப்ளூ வைரஸ் காய்ச்சல் என்பது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என பலருக்கும் பரவிக்கொண்டிருக்கிறது என்றும் இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
 
நீண்ட நாள் ஜலதோஷம், காய்ச்சல், இருமல் ஆகியவை இருந்தால் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அறிகுறி என்றும் இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவித்துள்ளனர் 
 
ப்ளூ வைரஸ் காய்ச்சல் என்பது சுவாச மண்டலத்தை நேரடியாக தாக்கும் என்பதால் இருமல் வந்துகொண்டே இருக்கும் அதே போல் உடல் வலி சோர்வு தொண்டை வலி வயிற்று வலி தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படும்
 
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும் ப்ளூ வைரஸ் காய்ச்சல் இருப்பவர்கள் பக்கத்தில் முக கவசம் அணிந்து தான் மற்றவர்கள் செல்ல வேண்டும் இன்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது 
 
சென்னையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ப்ளூ காய்ச்சல் பரவி வரும் நிலையில் அரசு தேவையான நடவடிக்கை எடுத்து இந்த நோயை கட்டுப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares