பிக் பாஸில் இருந்து ஆயிஷா வெளியேறும் முன்பு, போட்டிளார்களிடம் விரைவில் நல்ல செய்தி உண்டு என்று திருமணம் குறித்த அறிவிப்பை கூறி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
ஆயிஷா வெளியேறிய தகவல் நேற்று முன்தினமே வெளியான நிலையில் நடிகர் கமலின் அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சீரியல் நடிகை ஆயிஷா தற்போது வெளியேறி உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21போட்டியாளர்களில் ஒருவராக ஆயிஷா உள்ளே வந்தவர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக கமல், கடந்த வாரமே கூறிய நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ராம் வெளியேறினார்.
நாமினேஷனில் இருந்த ஆசிம்,கதிர், ஏடிகே அடுத்தடுத்து காப்பாற்றப்பட்டதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.
விரைவில் திருமணம் இதையடுத்து,ஆயிஷா மற்றும் ஜனனி இருவரும் இருந்தனர்.
கடைசி நொடியில் ஜனனி தப்பித்து ஆயிஷா வெளியேறி உள்ளார். ஆயிஷா வெளியேறும் போது திருமண ஏற்பாடு குறித்த நல்ல செய்தியை போட்டியாளர்களிடம் கூறி விட்டு சென்றார். மிக விரைவில் அவரின் திருமண அறிவிப்புகள் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
Cutest part BiggBoss and #Ayesha love ❤️ #BiggBossTamil6 pic.twitter.com/NO6IMa5lsh
— Bhai 🇦🇷 (@salyabhai1) December 11, 2022