பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுடன் தனலெட்சுமி கடுமையாக நடந்து கொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 6 தற்போது 60 நாட்களை கடந்து பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களை மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றுவார்கள்.இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6ல் மக்களின் கணிப்பின் பிரகாரம் சிவின் கணேசன் டைட்டில் வின்னராக வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்து வந்தது.
பிக் பாஸ் ஆரம்பித்து பத்தாவது வாரம் சென்றுக் கொண்டிருக்கும் நிலையில் குறைந்த தடவைகள் நாமினேஷனுக்கு சென்ற போட்டியாளராகவும் சக போட்டியாளர்களுடன் அன்பாக இருக்கும் போட்டியாளராகவும் சிவின் பார்க்கப்படுகிறார்.பிக் பாஸ் வீட்டில் தனலெட்சுமியின் அராஜகம்
இந்நிலையில் தனலெட்சுமி சிவினை பிக் பாஸ் வீட்டில் வைத்து சரமாறியாக திட்டியுள்ளார். இதன்போது கோவமடைந்த சிவின் தனலெட்சுமியை சரியாக பேசுமாறு வலியுறுத்தியும் கண்டுக்கொள்ளாமல் திட்டிக் கொண்டே இருந்துள்ளார். அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.