நமது முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் அவர்களின் உணவுமுறை. நாம் இப்போது முப்பது வயதுகளிலியே சர்க்கரைநோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாவதும் நமது உணவுமுறையால்தான்.

இயற்கை நமக்கு எண்ணற்ற கொடைகளை தந்திருக்கிறது, அதை முன்னோர்கள் மதித்து செயல்பட்டதால்தான் அவர்களால் ஆரோக்கிய வாழ்வு வாழ முடிந்தது. இயற்கையை மதிக்காததன் விளைவு இன்று நம் வருமானத்தில் பாதி மருத்துவ செலவிற்கே செல்கிறது.

ஆந்திரா, கர்நாடகம், மஹாராஷ்டிரா, தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது அதலைக்காய் என்னும் அற்புத மருந்து.

அதலைக்காய் பற்றி நம்மில் பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரு காய் உங்களை சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் என்றால் நம்புவீர்களா? ஆனால் இது பாதுகாக்கிறது என்பதுதான் உண்மை.

இந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரமாகும். இதிலுள்ள சத்துக்கள் நம்மை பலவகையான நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியது.

இதனை யாரும் விளைவிக்க வேண்டிய அவசியமில்லை. மழைக்காலம் வந்தால் இது தானாகவே சாலையோரமும், விளைநிலங்கள் அருகிலும் விளையத்தொடங்கும் இது தென்மாவட்ட விவசாயிகளுக்கு முதலீடே இல்லாமல் இலாபம் தரக்கூடியத்தாகும்.

இதிலுள்ள சத்துக்கள் முறையே நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் என இதில் உள்ள சத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தனை சத்துக்கள் நிறைந்த இதை நாம் கவனிக்காமல் இருப்பது நமது அறியாமைதான்.

அதலைக்காய் பாகற்காயை போன்றே கசப்பு சுவையுள்ளது, அதனாலேயே பெரும்பலானோர் இதனை உண்பதில்லை.ஆனால் இதன் மகிமையை அறிந்தவரகள் இதனை ஒருபோதும் வெறுப்பதில்லை. இதனை சாம்பாராக வைக்க இயலாது எனவே பொரியலாகவோ அல்லது புளி குழம்பாகவோ சமைத்து சாப்பிடலாம்.சரியான பக்குவத்தில் சமைத்தால் சுவையிலும், சத்துகளிலும் இதனை மிஞ்ச வேறு காய்கறிகளே இல்ல.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares