அமெரிக்காவில் நடிகர் நெப்போலியன் வாழ்ந்து வரும் வீடு மாடர்ன் அரண்மனையாக காணப்படும் புகைப்பட தொகுப்பு வெளியாகியுள்ளது.நடிகர் நெப்போலியன்
தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து அசத்திய நெப்போலியன், அரசியலிலும் பிஸியாக இருந்து வந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறிய பின்பு நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார். தற்போது அமெரிக்காவில் ஐடி கம்பெனி ஒன்றினை வைத்து அதில் 800 பேருக்கு வேலை போட்டு கொடுத்துள்ளாராம் நடிகர் நெப்போலியன்.
தற்போது தொழிலில் கொடிகட்டி பறக்கும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் தனுஷ் என்ற மகன் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் பிரபல யூடியூப் பிரபலமான இர்பானின் தீவிர ரசிகரான இருந்து வரும் நிலையில், அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார் நெப்போலியன்.
அப்போது தனது வீட்டை சுற்றிக் காட்டிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இந்தியாவிலிருந்து இவரது பொருட்கள் அமெரிக்காவிற்கு கப்பலில் கொண்டு சென்றுள்ளாராம்.
மேலும் இங்கு அரசு அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி சில சிலைகளையும் அவர் கொண்டு சென்றுள்ளார். வீட்டில் சூர்ய வெளிச்சம் படுவதற்கு ஒரு அறை, பிரத்யேக நீச்சல் குளம், மாற்றுத்திறனாளி மகனுக்காக பிரத்யேக லிப்ட், மகனுக்காக அதிநவீன பெட், பிரம்மாண்ட பாத்ரூம், சொகுசு கார்கள், ஒயின் அறை, ஹோம் தியேட்டர் என புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.