தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி.

விஜய், சிம்பு உட்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் ஹன்சிகா.

கடந்த 4ம் தேதி தன்னுடைய ஆண் நண்பரும், தோழியின் முன்னாள் கணவருமான சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்தார்.

முன்னணி நடிகர் ஒருவருடன் ஹன்சிகா காதலில் விழுந்தது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

அந்த காதல் தோல்வியில் முடிய, அந்நேரத்தில் தான் தன்னுடைய தோழியின் திருமணத்திற்கு சென்றுள்ளார் ஹன்சிகா.

சோகத்தில் இருந்த ஹன்சிகாவுக்கு, சொஹைல் ஆறுதல் கூறியுள்ளார். நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமாக, இதுகுறித்து தெரியவந்த ஹன்சிகாவின் தோழி சண்டையிட்டுள்ளார்.

ஆனால் சொஹைல் தொடர்ந்து மறுத்துவர, ஒருகட்டத்தில் கையும் களவுமாக மாட்டிக்கொண்டுள்ளனர்.

இதன்பின்னரே சொஹைலுக்கும், ஹன்சிகாவின் தோழிக்கும் விவாகரத்து நடந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது எந்தளவுக்கு உண்மை என்பதை ஹன்சிகா தரப்போ, சொஹைல் தரப்போ விளக்கம் அளித்தால் மட்டுமே தெரியவரும். 

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares