மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நிகோஜ் என்ற கிராமம் உள்ளது.இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரத்தா தவான்.அந்த காலக்கட்டத்தில் அவரது தந்தை சத்யவன், எருமைகளைக்கொண்டு பிழைப்பை நடத்தி வந்தார்.எருமை மாட்டு பாலை விற்பனை செய்தார்.மாற்றுத்திறனாளியான அவரால் உடல் பிரச்னைகள் காரணமாக ஒரு கட்டத்துக்கு மேல் பால் விற்பனை செய்ய முடியவில்லை.
இந்நிலையில் தான் 2011ம் ஆண்டு எருமைகளிடமிருந்து பால் கறக்கவும், அதனை விற்கும் பொறுப்பையும் தனது மகளிடம் ஒப்படைத்தார்அப்போது எல்லாமுமே தலைகீழாக மாறியது.காலையில், ஷ்ரத்தாவின் வகுப்பு தோழர்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர் கிராமத்தைச் சுற்றி பைக்கில் பால் பண்ணைகளுக்கு பால் வழங்கிக் சென்றுகொண்டிருப்பார்.
அவருடைய இந்தப் பொறுப்பு கல்வி கற்பதை கடினமாக்கியது என்றாலும், வகுப்பு தோழர்கள் பார்த்துவிடுவார்கள் என அவர் வெட்கப்படவில்லை.இரண்டு மாடி கட்டிடத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட எருமைகளுடன், ஷ்ரத்தா தனது தந்தையின் தொழிலை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்.
அந்த மாவட்டத்திலேயே பெண் ஒருவரால் தலைமை தாங்கி நடத்தப்படும் மாபெரும் கால்நடை கொட்டகையில் இதுதான் பெரியதும் புதியதும்கூட. தற்போது ஷரத்தா குடும்பத்தின் பொருளாதாரமும் மேம்பட்டுள்ளது. அவர்கள் ஒரு மாதத்திற்கு ரூ.6 லட்சம் சம்பாதிக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, ஷ்ரத்தா ஒரு நாளைக்கு 150 லிட்டர் பாலை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இது குறித்து ஷ்ரத்தா கூறுகையில்,
ஆரம்பத்தில் சற்று அசிங்கமாகவும், தயக்கத்துடனும் இந்தத் தொழிலை செய்தேன்.எனது பகுதியில் பால் விற்க ஒரு பெண் பைக் சவாரி செய்ததை இதுவரை நான் பார்த்ததில்லை; அறிந்ததில்லை.இருப்பினும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பலரும் பெருமிதம் அடைந்து என்னை ஊக்குவித்தனர்.அவர்களின் உன்னதமான வார்த்தைகளே எனது வேலையின் அருமையை எனக்கு புரிய வைத்தது. எனது நம்பிக்கையை அதிகரித்தது.
ஆரம்பத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் பல சவால்களை எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது.அதற்காக தீவனம் வாங்குவது லாபத்தை பெரிதும் பாதித்தது. கோடையில் தீவனத்துக்கான விலைகள் அதிகரித்தன.சில நேரங்களில் பற்றாக்குறையின் போது, மாதாந்திர செலவினங்களுக்காக எங்களுக்கு 5,000-10,000 ரூபாய் மட்டுமே எஞ்சியிருந்தது.
எங்கள் கொட்டகையை ஒரு நாளைக்கு இரண்டு முறை சுத்தம் செய்வோம். மேலும் அனைத்து விலங்குகளும் வழக்கமான சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்துகிறோம்.80 எருமைகள் பண்ணையில் இருப்பதால், ஒரு நாளைக்கு சுமார் 450 லிட்டர் பாலை விற்பனை செய்கிறோம்.2019 ஆம் ஆண்டில், விலங்குகளை வளர்ப்பதற்காக இரண்டாவது தளத்தை நாங்கள் கட்டினோம்.எங்கள் கிராமத்திலேயே நான் தான் இயற்பியல் பட்டப்படிப்பை முடித்திருக்கிறேன் என கூறினார்.