திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் திகதி சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

இந்த சனி பெயர்ச்சியால் மிதுனம், கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். ஆட்டி படைத்தாலும் லாபத்தை கொடுக்கும் சனி

மிதுனம் 2023ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே சனி பகவானால் உங்களுக்கு அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. 

சனிபகவானின் பார்வையால் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கும் அற்புதமான கால கட்டம்.

வியாபாரம் செய்ய மார்ச் முதல் ஜூன் வரை சிறந்த கால கட்டம். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஜூன் முதல் நவம்பர் மாதம் வரைக்கும் சனி பகவான் வக்ர நிலையில் செல்வதால் கவனமாக இருப்பது அவசியம்.

கடகம் சனி பெயர்ச்சி ஜனவரி 17ஆம் தேதி நிகழ உள்ளது. அஷ்டமத்து சனி காலம் என்றாலும் விபரீத ராஜ யோகத்தை தருவார்.  

செய்யும் வேலைகளில் கவனமும் நிதானமும் அவசியம். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய வேண்டாம். உணவுகளில் கவனம் தேவை.
விபரீத ராஜ யோகத்தை கொடுத்தாலும் சனி பகவான் நிறைய வேலை பளுவை தரப்போகிறார். கவனமாக கையாளுங்கள் யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அதுவே உங்களுக்கு சிக்கலாகி விடும். 

இரண்டு ராசிக்கும் பரிகாரம்

சனி பகவான் 2023ஆம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் வரைக்கும் வக்ர கதியில் செல்லும் போது கவனமாக இருப்பது அவசியம். 
குறிப்பாக வாகன பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. சனிக்கிழமை தோறும் ஏழைகளுக்கு உணவு தானம் செய்யுங்கள். ஆடை தானம் செய்யுங்கள். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. 

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares