எல்லா பருவங்களிலும், எல்லா இடங்களிலும், எளிதாக வளரக்கூடிய ஒரு செடியாக நாயுருவியை நாம் அறிந்திருப்போம். குறிப்பாக மழைகாலங்களில் பார்க்கிற இடங்களில் எல்லாம் சாதாரணமாகத் தென்படக்கூடிய நாயுருவிக்கு, அசாதாரணமான பல மருத்துவகுணங்கள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் உள்ள தகவல்களை முழு விடியோவாக பார்க்க விருப்பம் உள்ளவர்கள் கீழே சென்று பார்த்துக்கொள்ளவும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னோர்கள் இன்றுபோல பேஸ்ட் மற்றும் பிரஷ் இல்லாத அந்த காலங்களில், நாயுருவி வேரையே, பிரஷாகவும் பேஸ்டாகவும் பயன்படுத்தி வந்தனர். எதனால் தெரியுமா? நாயுருவி வேர், பற்களின் வெற்றிலைக்கறைகளை நீக்கி, இயல்பான நிறத்தை அடைய வைப்பதுடன், பற்களில் படியும் தொற்றுக்களையும், அழித்து நீக்கிவிடும் தன்மைமிக்கது
மூலநோயால் அவதிப்படுபவர்கள் அதிலும் ரத்த மூலம் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் நாயுருவி இலையை பயன்படுத்தலாம். நாயுருவி இலையை அரைத்து பசையாக்கி சம அளவு நல்லெண்ணெய் கலந்து குழைத்து சாப்பிட வேண்டும். ஒரு வாரம் வரை தொடர்ந்து காலை மாலை வேளைகளில் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து எருமைத்தயிரில் காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தாலும் ரத்த மூலம் சீராகும்.
தேளோ, சிலந்தியோ கடித்துவிட்டால் உடனடியாக நாயுருவி இலையைக் கொண்டு வந்து கடிகண்ட இடத்தில் சாறை பிழிந்து தேய்த்து விட்டால் விஷம் விரைவில் இறங்கிவிடும். நாயுருவியின் விதையை வெய்யிலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை காற்று புகாத இறுக்கமாக பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு விரல்களில் எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும் மாலையிலும் தொடர்ந்து 24 நாட்கள் சாப்பிட வேண்டும்.
இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும். உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி மூலம் வெளியேறிவிடும். வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும். “100 தடவை பாம்பு கடித்தாலும் நீங்கள் சாகாமல் இருக்க வேண்டுமென்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள் !!”