இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷனுக்கு தெரிவான போட்டியாளர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
வெளியேறிய குயின்ஸி பிக் பாஸ் சீசன் 6 நிறைவு காலத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் சுமார் 21 போட்டியாளர்கள் களமிறங்கியிருந்தார்.

ஆனால் மக்களின் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளைப் பெற்ற சுமார் 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளர்.
மேலும் கடந்த வாரம் குயின்சி வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த வார தலைவரின் தெரிவுக்கான டாஸ்க்கள் பிக் பாஸால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்கில் தனலெட்சுமி, சிவின் கணேசன் மற்றும் மணிகண்டன் கலந்துக் கொண்டார்கள். மேலும் முதல் சுற்றில் சிவின் தோல்வியுற்றதால் மணிக்கும் தனலெட்சுமிக்கும் போட்டிகள் தொடர்ந்தது. இந்நிலையில் இந்த வாரம் தலைவர் மணி என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷனில் ஆயிஷா, ராம், மணி, அசீம் ஆகியோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வாரம் ஆயிஷா அல்லது ராம் வெளியேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அசீமிற்கு மூன்றாவது வொர்னிங் கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த வாரம் அசீம் ரெட்கார்ட்டுடன் வெளியாகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

You missed

Shares