உலகம் இன்று பரபரப்பான சூழலுக்குள் சிக்கிக் கொண்டது. வேலை, சம்பளம், டார்கெட் என சுற்றிச் சுழன்று ஓடிக்கொண்டு இருக்கிறோம். அதிலும் கரோனா காலத்தில் அவர், அவர் வேலையைப் பார்த்துக் கொள்வதே பெரிய டார்கெட் ஆகிவிட்டது.
ஆனால் இன்றைய காலக்கட்டத்திலும் தன் தனிப்பட்ட வாழ்வை விட அடுத்தவர்களுக்காக உருகுபவ்ர்கள் அதிகளவில் இருக்கத்தான் செய்கிறார்கள். இங்கேயும் அப்படித்தான். ஒருபறவை மின்சார கம்பியில் சிக்கிக் கொண்டது. அது மரணத்தின் விளிம்பில் துடித்துக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்து பதட்டப்பட்ட சிறுவன் ஒருவன் விறு, விறுவென போஸ்ட் தூணில் ஏறிவிட்டான். மேலும் கையில் கொண்டு சென்றிருந்த கம்பால் பறவையின் மேல் தட்டினான். அடுத்த நொடியே அந்த சிறுவனின் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அந்த போஸ்ட் தூணில் இருந்தே கீழே விழுந்தான் அந்த சிறுவன். இதில் மின்சாரம் பாய்ந்தும், தலையில் அடிபட்டும் உயிருக்கே போராடி இறந்தான் அந்த சிறுவன்.
இன்னொரு இதேபோல் மின்சார கம்பியில் பறவை ஒன்று சிக்கிக் கொள்ள, ஹெலிகாப்டரில் போய் அதை மீட்கும் மனிதம், ஒரு பாட்டி நாயை டிராபிக்கில் அடிபடாமல் பத்திரமாக அழைத்துச் செல்வது ஆகிய காட்சிகளும் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே இந்த மனிதத்துவ நிகழ்வுகளை இந்த வீடியோ இணைப்பில் பாருங்கள்.