தற்போதைய இளைய சமுதாயத்தை கவலைக்கொள்ளும் விஷயங்களில் இளநரை பிரச்னையும் ஒன்றாகும். இந்த பிரச்சனையால் ஆண் – பெண் இருபாலருமே மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
அதிலும் சிலருக்கு சிறுவயதிலே நரைமுடி வந்துவிடுகின்றது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.
குறிப்பாக பரம்பரை, மற்றும் தலையில் பொடுகு அதிகம் தோன்றினால் அது வேர்க்கால்களை அடைத்து மெலனின் உற்பத்தியை குறைத்து நரையை அதிகப்படுத்தும்.
தலைக்கு பயன்படுத்தும் சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களில் உள்ள ஹைட்ரஷன் பெராக்சைடு, வேர்க்கால்களை சேதமடைய செய்து கறுப்பு நிறமிகளை அழித்து நரைமுடிகளை அதிகப்படுத்தும்.
இவற்றை எளியமுறையில் கூட சரி செய்ய முடியும். தற்போது நரை முடியை போக்க கூடிய ஒரு எளியமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.