தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ராட்ஷசன். இந்த முழுக்க திர்ல்லர் பாணியில் சைக்கோவின் நிகழ்வுகளை காட்டும் வகையில் பலத்த திருப்பங்களுடன் எடுக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் அமலபால், முனிஷ்காந்த், அம்மு அபிராமி,
காளி வெங்கட் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். மேலும் இந்த படத்தில் வந்த சைக்கோ கதாபத்திரத்தை யாராலும் மறக்க முடியாது அந்த அளவிற்கு அந்த கதாபத்திரம் சிறப்பாக அமைந்து இருக்கும். இந்நிலையில் அந்த கேரக்டரில் நடித்தது யாரென இறுதிவரை படக்குழு ரகசியமாக வைத்திருந்த நிலையில்
இறுதியில் அவர்களே அவரை அறிமுகபடுத்தி இருந்தனர். அவரது பெயர் சரவணன் நேரில் பார்க்க அப்பாவியாக இருக்கும் இவர் படத்தில் கிறிஸ்டோபர் எனும் கேரக்டரில் மிரட்டி இருப்பார். அதேபோல் இவருடன் சிறுவயது பள்ளிபருவ காட்சியில் சோபி எனும் கதாபாத்திரத்தில் நடித்து கதையின் மையமாக இருந்தவர் ராகவி ரேணு. சோசியல் மீடியாவில் டிக்டாக் செயலியின் மூலமாக பிரபலமான இவர் மக்கள்
மத்தியில் பலத்த பிரபலத்தை அடைந்த பின்னரும் இந்த படத்தை தொடர்ந்து வேறு படங்களில் இவரை பார்க்க முடியவில்லை . இந்நிலையில் சமீபத்தில் இவரது டிக்டாக் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த வீடியோவில் இவரை பார்த்த பலரும் சோபியாவா நடிச்ச பொண்ணா இது என வாயடைத்து போயுள்ளனர்…..