இந்த காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் அறிமுகமானவர்கள் கூட அதன் பின்னர் ஒரு காலகட்டத்தில் அவர்களே பிரபல நடிகையாக கூட மாறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த சமயத்தில் பல நடிகர் அல்லது தயாரிப்பாளர் அவர்களது வாரிசுகளை குழந்தை நட்சத்திரமாக சில்வர் அறிமுகப்படுத்த தொடங்கி உள்ளார்கள்.
இந்த ஒரு நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் ஜில்லா என்கிற திரைப்படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த சினிமாவுக்குள் அறிமுகமானவர் தான் ரவீனா தாஹா.அந்த திரைப்படத்தை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கதை சொல்ல போறோம் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 என்கிற ஒரு ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார் ரவீனா தாஹா. இதனைத் தொடர்ந்து இவர் சினிமா மட்டும் இல்லாமல் சீரியல்கழியும் நடித்து வருகின்றார். அந்த வகையில் மௌனராகம் 2 என்கிற சீரியலில் சக்தியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு இப்போது 18 வயது தான் ஆகின்றது. இதைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவேபூச்சூடவா என்கிற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக என்ட்ரி உள்ளார். அந்த சீரியலில் கடைக்குட்டி தங்கச்சியாக பல சேட்டைகளை செய்து வந்து உள்ளார்.
இதனை தொடர்ந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகி உள்ளது. இதனை தொடர்ந்து 2018ம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் திரைப்படம் மெகா ஹிட் அ டித்தது. அந்த திரைப்படத்தில் நடித்த அம்மு அபிராமிக்கு அடுத்தகட்டமாக கதாபாத்திரத்தில் பிரபலமாகப் பேசப்பட்டவர் ரவீனா தாஹா.
அந்த திரைப்படம் இவரது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்து இருந்தது . இது மட்டும் இல்லாமல் இப்போது விரைவில் வெளியாக இருக்கும் பிட்சா 3 என்கிற திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒரு நிலையில் தனது சிறுவயது போட்டோவை முதன் முறையாக இணையத்தில் வெளியிட்டு உள்ளார்…