டயானா மரியம் குரியன், தொழில்ரீதியாக நயன்தாரா என அழைக்கப்படுகின்றார், ஒரு இந்திய நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் பணிபுரிந்ததற்காக அறியப்பட்டவர்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகிறார், ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்துவிட்டார்.
கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தனது நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார், சிவப்பு நிற புடவையில் நயன்தாராவும், பட்டு வேஷ்டி சட்டையில் விக்னேஷ் சிவனும் ஜொலிக்க திரைப்பிரபலங்கள், சொந்த பந்தங்களுடன் வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.
தொடர்ந்து தாய்லாந்து, ஐரோப்பிய நாடுகளில் ஹனிமூனை கொண்டாடினர், கழுத்தில் மஞ்சள் தாலி கயிற்றுடன் கணவருடன் ரொமான்ஸ் செய்த தம்பதிகளின் புகைப்படங்கள் வைரலானது.இந்நிலையில் கடந்த அக்டோபர் 9ம் தேதி இரட்டை மகன்களுக்கு பெற்றோராகியிருப்பதாக அறிவித்தார் விக்னேஷ் சிவன், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக தெரியவந்தது.
இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், விசாரணை நடத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்தது, 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத்திருமணம் செய்து கொண்டதாகவும், சட்டவிதிகளின்படியே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாகவும் விளக்கம் அளித்தனர்.
இந்தநிலையில் மேலும் அதிர்ச்சியாக தற்போது ஒரு புகைப்படத்தை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் வெளியிட்டுள்ளனர்.அதில் விக்னேஷ் சிவன் கையில் இருக்கும் குழந்தை ஐந்து வயதிற்கு மேல் இருப்பது போல தெரிகிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள் என்னடா இது இப்போதான் குழந்தை பிறந்துச்சு அதுக்குள்ளே இவ்ளோ பெருசாகிடுச்சா என ஷாக்காகியுள்ளனர்.ஆனால் இது அவர்களது குழந்தை இல்லை என்பது பின்னர் தெரியவந்துள்ளது.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.