நமது அன்றாட வாழ்க்கையில் ரசாயனப் பொருட்கள் கலந்த க்ரீம்களை நமது சருமத்தில் பயன்படுத்தி வருவதால், ஏராளமான சரும பிரச்சனைகளுக்கு ஆளாகின்றோம்.நமது சருமத்தை பொலிவாக்கும் என்று கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை நாம் வாங்கினால், அது அந்த விற்பனையாளர்களுக்கு தான் அதிக லாபத்தை ஈட்டுத்தரும்.
ஆனால் நமக்கு முகத்தில் பருக்கள், கொப்புளங்கள் போன்ற பல்வேறு சருமப் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் கொண்டுச் சென்று விடும் என்பதை நாம் நன்றாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நம்மை சுற்றியுள்ள சூழலில் இருக்கும் மாசுக்கள் மற்றும் கண்ட க்ரீம்கள் மூலம் நம்முடைய முகமானது பொலிவினை இழந்து கழுத்து, மூக்கு போன்ற பகுதிகளில் அதிக கருமையை உண்டாக்கி, நம் முகத்தின் அழகையே கெடுக்கிறது.
எனவே நமது அழகை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள கழுத்து பகுதியில் இருக்கும் கருமையை போக்குவதற்கு நமது வீட்டிலே இருக்கும் இயற்கையான டிப்ஸ் இதோ.