காட்டு யானை ஒன்று இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த தலைக்கவசத்தை கவ்விச்சென்ற வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அசாம் மாநிலம் குவஹாத்தி பகுதியில் இருக்கும் ராணுவ வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அங்கிருந்து வெளியே விரட்டப்பட்டபோது, யானை அங்கிருந்த தடுப்புகளை தாண்டி சாலையில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை பார்த்த அந்த யானை இருசக்கர வாகனத்தின் அருகில் சென்றது.
பின்னர் அந்த இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை லாவகமாக எடுத்து, தேங்காயை கவ்வுவது போல வாயில் கவ்விச் சென்றுதுள்ளது.
#VIDEO | Hungry Elephant tries to gobble a helmet in #Guwahati. Watch! #Assam pic.twitter.com/5i6Na3GKeW
— G Plus (@guwahatiplus) June 10, 2021