குழந்தைகள் தான் இந்த உலகிலேயே கள்ளம் கபடம் இல்லாதவர்கள். அவ்வளவு அன்பினைக் குழந்தைகள் கடத்துவார்கள். அதனால் தான் எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் குழந்தைகளோடு பொழுதைக் கழிக்கும் போது அந்த சோகம் அப்படியே நம் நெஞ்சை விட்டு மறைந்துவிடும்.

அதேபோல் குழந்தைகள் மிகவும் பாசத்துக்கிரியவர்களாக இருப்பார்கள். அவர்களது அன்பு தூய்மையானதாகவும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கும். அதனால் தான் குழந்தைகள் செய்யும் சின்ன செய்கைகள்கூட அவ்வப்போது இணையத்தில் வைரலாகிவிடுகிறது. அதிலும் இது கொரோனா காலம். லாக்டவுணால் அனைவருமே வீட்டிலேயே இருக்கிறார்கள். அதிலும் குழந்தைகளோடு இருக்கும் வீடுகளில் நேரம் போவதே தெரியாது. குழந்தைகள் சிலநேரங்களில் நம்மைவிடவும் புத்திசாலியாக இருப்பார்கள்.

சூழல்களை உள்வாங்கி மிகச்சரியாகப் பேசுவார்கள். அந்தவகையில் இங்கேயும் அப்படித்தான். ஒரு குழந்தை இந்த கொரோனா காலச்சூழலில் பள்ளிக்கூடம் இல்லாமல் லீவு விட்டுக்கொண்டே இருப்பதால் தான் படும் சிரமங்களைப் பேசியிருக்கிறார். அதில் அவர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார் என்கிறீர்களா? பள்ளிக்கூடம் இல்லாமல் ரிலாக்ஸ்டாகத் தானே இருக்கிறாய் என அவரது அம்மா, வீட்டில் பாத்திரம் கழுவ வைத்திருக்கிறார். இந்தக் குட்டிக் குழந்தையும் பாத்திரம் கழுவிக் கொண்டே பேசுகிறார்.

அதில் அவர், நீங்க இப்படியே லீவு விட்டுகிட்டே இருங்க. நான் படிக்குறனோ இல்லையோ பாத்திரம் கழுவ நல்லா கத்துகிட்டேன். எங்க அம்மா இருக்கே, அம்மா என்னை வைச்சு நல்லா செய்யுறாங்க. நீங்க நல்லா லீவு விட்டுட்டே இருங்க என செம க்யூட்டாகப் பேசுகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares