கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வருகிறது இந்நிலையில் இதன் காரணமாக பல முன்னணி திரைபிரபலங்களும் நம்மை விட்டு பிரிந்து காலமாகி வருகின்றனர். இந்நிலை விடாது தொடர்ந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி சினிமா பிரபலம் காலமாகியுள்ளார். அந்த வகையில் அஜித், விஜய், சூர்யா, கமல், விஜயகாந்த் என பல
முன்னணி நடிகர்களை வைத்து தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை தயாரித்து அதில் வெற்றி பெற்றவர் பிரபல முன்னணி பட தயாரிப்பாளர் முரளிதரன். இவர் பிரபல முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மூன்று பங்குதாரர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் இவர் பகவதி, அன்பே சிவம், புதுபேட்டை, சிலம்பாட்டம் போன்ற பல படங்களை தயாரித்து உள்ளார்.
மேலும் அந்த காலத்திலேயே சூர்யாவின் உன்னை நினைத்து ப்ரியமுடன் போன்ற பல படங்களை தயாரித்து உள்ள நிலையில் நேற்றைய நாளில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார் மேலும் இவருக்கு 66
வயதே ஆகும் நிலையில் இவரது இழப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டு மொத்த தென்னிந்திய திரையுலகினரையும் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து இந்த தகவல் அறிந்த பல முன்னணி திரை பிரபலங்களும் இரங்கல் இணையத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்………
தளபதி விஜய் பட முன்னணி தயாரிப்பாளர் மாரடைப்பால் காலமானார் ….. உறைந்துபோன ஒட்டுமொத்த திரையுலகினர் …..
