பல நடிகர்கள் மேடை நாடகத்தின் மூலம் தான் தனது நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்துள்ளார்கள். அதேபோன்று மேடை நாடகத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை வள்ளி மாரிகண்ணு என்பவர்.
இவர் வள்ளி திருமணம் திருவிளையாடல் போன்ற பல்வேறு திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இவருடைய நடிப்பை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதும் என கூறுவார்கள்.
அந்த அளவிற்கு இவருடைய நடிப்பினை மக்கள் ரசித்து பார்ப்பார்களாம். இது மட்டுமலாமல் சிறந்த நடிப்பிற்காக அப்போதிருந்த ஜனா திபதி அவர்களிடம் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். இதன் பிறகு திருமணமாகி 2 மகன்கள் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இப்படி சந்தோஷமாக வாழ்ந்து வந்த நடிகை வள்ளி மாரிகண்ணு, தற்போது தெருவில் அனாதையாக ஆதரவின்றி வாழ்ந்து வருகிறார்.இவர் ம.ன.நிலை பா.திக்கப்பட்டு தெருவோரத்தில் படுத்து தூங்கி வருகிறார். இது குறித்து ஊர் மக்கள் கூறியதாவது இந்த அம்மாவை பார்ப்பதற்கு யாரும் வருவதில்லை.