சாதி, மதம், மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு உலகம் முழுவதும் இருக்கும் ஒரு விசயம் என்ன தெரியுமா? ‘காதல்’ மட்டும் தான்!

காதல் இல்லாத உலகம்…அது காற்று இல்லாத நரகம் என்னும் திரைப்படப் பாடலைப் போலத்தான் மனித வாழ்க்கையில் காதலை பிரித்துப் பார்க்கவே முடியாது.

காதலித்து திருமணம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், திருமணத்துக்குப் பின்பு காதல் செய்பவர்கள் மறுபக்கம். எது எப்படியோ கணவன், மனைவி இடையே காதல் இருந்தால் மட்டுமே வாழ்க்கை வசந்தமாகும். பதின் பருவக் காதல்கள் எப்போதுமே தடுமாற்றத்துக்கு உரியதாக இருக்கும். அதில் கொஞ்சம் கவனமாக இருந்து, வாழ்வில் நல்ல நிலையை அடைந்த பின் கைபிடிப்பது மிகவும் நல்லது.

காதல் தப்பே இல்லை. அதேநேரம் நாம் காதலிப்பவரை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இங்கே காதலித்து, காதலியால் காதலன் கைவிடப்பட்டுள்ளார். அப்படியான சூழலில் அவருக்கு ஒரு பெண் மனைவியாகக் கிடைத்துள்ளார். அவரால் இவரது வாழ்க்கையே வேற லெவலில் மாறியுள்ளது. அவர் பேசுவதைக் கேட்க, கேட்க இப்படியொரு மனைவி கிடைத்தால் நம் வாழ்க்கையே சொர்க்கம் தான் என்று தோன்றுகிறது.

அப்படி அந்த வாலிபர் என்ன சொன்னார் தெரியுமா? ‘’நாலஞ்சு வருசமா ஒரு பொண்ணை லவ் பண்ணுனேன். கடைசி அவுங்க டாக்டர் நம்ம ஏதோ பிளாட்பார்ம்ன்னுட்டு போயிட்டாங்க. அந்த நேரத்தில் லவ் பண்ண பொண்ணும் சப்போர்ட் இல்ல. என் வீட்டுலயும் சப்போர்ட் இல்ல. தண்ணி, கஞ்சான்னு அடிச்சுட்டு இந்நேரம் நான் செத்தே போயிருப்பேன். இவுங்க மட்டும் மனைவியா கிடைக்கலைன்னா அதுதான் நடந்திருக்கும்.

என் லவ் மேட்டர் தெரிஞ்சே என்னை ஏத்துக்கிட்டாங்க. இத்தனைக்கும் என்னோட நெஞ்சுல முன்னாள் காதலியோட பேரை பச்சை குத்திருப்பேன். அது இன்னும் கூட இருக்கு. நான் 90 சதவிகிதம் லவ் பெயிலியரில் செத்துருப்பேன். என் மனைவு மட்டும் இல்லீன்னா…’என சொல்கிறார்.

இப்போ சொல்லுங்க…இப்படியொரு மனைவி கிடைத்தால் இல்லற வாழ்வே சொர்க்கம் தானே

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares