இன்றையகால இளைஞர்களுக்கு விவசாயத்தின் அருமை, பெருமைகள் தெரியவில்லை என பலரும் சொல்லி வருகின்றனர். இப்படியான சூழலுக்கு மத்தியில் ஒரு இளவயது விவசாயி ஒருவர் பசுமாட்டோடு சேர்ந்து ஒரே தட்டில் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாடுகளை வீட்டின் பின்வாசலில் கட்டி வைக்கும் விவசாயிகள் பலரையும் பார்த்திருப்போம். ‘’ஆடு, மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேசன்கார்டில் பேரை சேர்க்க கேட்கும்” என சிவாஜி திரைப்படத்தின் பல்லேலக்கா பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடும் பாடலைப் போலவே நிஜத்தில் ஒரு இளைஞர் இருக்கிறார் என்றால் ஆச்சர்யம் தானே?
தன் வயலில் விவசாய வேலை செய்யும் அந்த வாலிபர் மதிய உணவு இடைவெளியின் போது ஒரே தட்டில் தன் வீட்டு மாட்டோடு சேர்ந்து சாப்பிடுகிறார். குறித்த அந்தக்காட்சியை இணையத்தில் பலரும் சேர் செய்துவருகின்றனர். இதைப் பார்த்தப் பலரும் இந்த தலைமுறையில் இப்படியும் ஒரு இளைஞனா எனப் பகிர்ந்துவருகின்றனர்.