புதன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது.
அதிர்ஷ்டத்தினை கொடுக்கும் புதன் சில ராசிக்காரர்களுக்கு ஆபத்தையும் ஏற்படுத்த போகின்றார்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் புதன் பெயர்ச்சி பலன்கள் எப்படியிருக்கும் என பார்க்கலாம்.
கொட்டி கொடுக்க போகும் புதன் பெயர்ச்சி! யார் யாருக்கு பேராபத்து? உடனே தப்பிக்க இதோ பரிகாரம் | Budha Peyarchi 2022
புதன் பெயர்ச்சி பலன்கள்
மேஷம் புதன் பெயர்ச்சியால் பணம் வந்து கொண்டேயிருக்கும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பச்சைப்பயிறு வேக வைத்து நைவேத்தியம் செய்து தானம் செய்யுங்கள் பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது.
ரிஷபம் புதன் உங்களுக்கு நிறைந்த யோகத்தை தரப்போகிறார். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன்கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள் நன்மைகள் நடைபெறும்.
மிதுனம் தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பயணங்களில் எச்சாிக்கை தேவை. பாதிப்புகள் குறைய புதன் காயத்ரி மந்திரத்தை கூறி பாசிப்பயறு நைவேத்தியம் செய்து வணங்கலாம்.
கடகம் பண வரவு அதிகரிக்கும். உடம்பில் அரிப்பு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. ஆலயங்களுக்கு சென்று தீபம் ஏற்றி வணங்குவது நல்லது.
சிம்மத்திற்கு புதனால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். புதன்கிழமைகளில் நவகிரக ஆலயத்திற்கு சென்று புதனை பச்சை வஸ்திரம் சாற்றி வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.
கன்னி புதிய சொத்துக்கள் வாங்கலாம். பணம் வருவாய் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும்.
துலாம் ராசிக்கு புதன் பகவானால் பண வருமானத்திற்கு பஞ்சமிருக்காது என்றாலும் கடன் தொல்லை அதிகாிக்கும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கவும்.
விருச்சிகம் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். பணவருவாயும், சொத்து சோ்க்கை உண்டு. உடல் நலனில் அக்கறை செலுத்தவும். புதன்கிழமை பெருமாளை துளசி சாற்றி வணங்கி வர மேலும் பல நன்மைகள் நடைபெறும்.
உங்கள் ராசியில் அமரும் புத பகவானால் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். அலுவலகத்தில் சிலருக்கு கெட்ட பெயா் வரும் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மகர ராசிக்கு மறைமுக எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல் உபாதை ஏற்படும் கவனம் தேவை. பாதிப்புகளில் இருந்து தப்பிக்க புதன்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.
கும்பம் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பண வருவாய் உண்டு. எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும்.
மீனம் சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும். வீடு, நிலம், வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். பெருமாளை புதன்கிழமைகளில் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.