அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
‘’மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேராது என” என கவிஞர் முத்துக்குமார் எழுதிய வரிகளின் வீச்சு ஒவ்வொரு அப்பாவுக்கும் தெரியும்.
அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். இந்த வீடீயோவிலும் அப்படித்தான். மகளை, மருமகனுக்கு கன்னிகாதானம் செய்து தாரைவார்த்துக் கொடுக்கும் அப்பா கன்னிகாதானம் சொல்லும் அந்த மூன்று நிமிடங்களுக்குள் உடைந்து உருகுகிறார்.
சம்பிரதாய சடங்கினைக் கூட டக்கென்று செய்து முடிக்க முடியாத அளவுக்கு அணை போடுகிறது அவரது பாசம். கண்ணில் இருந்து கண்ணீர் பெருகுகிறது. பார்வதி பரமேஸ்வர சாட்சியாகவும், சூரிய சந்திர சாட்சி..33 கோடி தேவர்கள் சாட்சியாகவும், அக்னி, பெரியோர்கள், சபையோர்கள் சாட்சியாகவும் என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த தந்தையின் கண்களையும், அவரது செய்கைகளையும் பாருங்கள்.
மணப்பெண்ணின் அம்மா ஒருபக்கம் இதைப் பார்த்துவிட்டு கைக்குட்டையால் தன் கண்ணீரைத் துடைக்கிறார். வீடீயோவைப் பாருங்களேன்…நீங்களும் உருகிப் போவீர்கள்