தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் தற்போது படங்களில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். அந்த வகையில் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் வளர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் தேர்ந்த நடிப்பால் பல இளைஞர்களின் மனதை

வெகுவாக கொள்ளை கொண்டு இன்றளவும் பலரின் கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை கண்ணழகி மீனா. இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் இவருக்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததை அடுத்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்தா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீனாவின் கணவரான வித்யாசகர் உடல்நிலை குறைவு காரணமாக எதிர்பாரதவிதமாக காலமானர். இதையடுத்து சில காலம் தனிமையில் இருந்து வந்த மீனா சமீபகாலமாக அதிலிருந்து மீண்டு வந்து பல

நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் மீனா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள பல தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது இது குறித்து கேட்டபோது அவருக்கு இதில் துளியும் விருப்பம் இல்லாத நிலையில் அவரது மகளுக்காக அவரது பெற்றோர்கள் இந்த முடிவை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து மீனா தரப்பிடம் விளக்கம் கேட்டபோது இது முற்றிலும் வெறும் வதந்தியே என கூறி வருகின்றனர்…..

 

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares