சோசியல் மீடியாவில் கடந்த சில வருடங்களாகவே முன்னணி சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இளம் வயது மற்றும் குழந்தை பருவத்து புகைப்படங்களை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கம் டிறேண்டிகாக மாறிய நிலையில் திரையுலகில் பலரும் தங்களது புகைப்படங்களை பதிவிட்டு வைரலாகி வருகின்றனர். அந்த வகையில்

சமீபத்தில் இணையத்தில் காதில் ஹெட்செட்டுடன் வேற லெவலில் போஸ் கொடுக்கும் சிறுவனின் புகைப்படம் ஒன்று வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யாரென தெரியுமா அது வேறு யாருமில்லை பிரபல முன்னணி இசையமைப்பளார் ஆன அனிருத் தான் அது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3

படத்தின் மூலமாக திரையுலகில் இசையமைப்பளார் ஆக இவர் தனது முதல் படத்திலேயே பின்னணி இசை மற்றும் பாடல்கள் என அனைத்திலும் வேற லெவலில் கலக்கி இருந்தார். இதனைதொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வருவதோடு உலகளவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கூட பிரபல முன்னணி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் இசையமைத்து இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். இவ்வாறு இருக்கையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…..

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares