மனித உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பாகும். ஆரோக்கியமான கல்லீரல் செரிமானம் சீராக நடைபெற, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள என பல முக்கிய பணிகளைச் செய்கிறது. அதோடு கல்லீரல் புரோட்டீன் உற்பத்தி மற்றும் பித்தப்பையில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை சேமிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது.
இந்த சக்தி வாய்ந்த உறுப்பு, டாக்ஸின்களான ஆல்கஹால் மற்றும் மருந்துகளை உடைத்தெறிய உதவி, கல்லீரலை நல்ல வடிவமைப்பில் வைத்துக் கொள்ள உதவுகிறது.ஒருவரது உடலில் கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், இது சர்க்கரை நோய், இரத்த அழுத்த பிரச்சனை, ஆட்டோஇம்யூன் நோய்கள் மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
ஆரோக்கியமற்ற கல்லீரல் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, மன இறுக்கம், தலைவலி மற்றும் ஏற்றஇறக்க மனநிலையை உண்டாக்கும். எனவே ஒவ்வொருவரும் கல்லீரலை ஆரோக்கியமாக, நோய்த்தொற்றுகள் ஏதும் தாக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
உங்களுக்கு கல்லீரலில் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என தெரியவில்லையா? அப்படியானால் தொடர்ந்து கீழே உள்ள வீடியோ பாருங்கள். இவ் வீடியோவில் கல்லீரல் தொற்றுக்களைத் தடுக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.