நடிகர் கமல்ஹாசன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் தங்கியிருந்த கமலுக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சல் இருந்துள்ளது.
இதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று நேற்று இரவு கமல் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்.
உடல் பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் கமல்
முழு உடல் பரிசோதனைகள் செய்து முடித்த பிறகு இன்று காலை வீடு திரும்பலாம் என தெரிகிறது.
இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகநாயகன் மருத்துவமனையில் இருப்பதால் இந்த வார பிக் பாஸ் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுமா என்ற கோள்விகளும் இணையத்தில் எழுந்து வருகின்றது. மிக விரையில் கமல் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.