ஆங்கில மருத்துவத்தில் இது ஏன் ஏற்படுகிறது என் குறிப்பட்ட தெளிவான காரணம் ஏதும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது. பெரியளவில் காணப்பட்டால்… ஒருவேளை மணிக்கட்டில் ஏற்படும் இந்த வீக்கம் பெரியளவில் காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

சிலருக்கு மணிக்கட்டின் மேற்பகுதி அல்லது கீழ் பகுதியில் வீக்கம் இருக்கும். இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், இது சில சமயங்களில் அபாயகரமான பிரச்சனையாக மாறலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.மணிக்கட்டின் மேற்பகுதியில் முண்டு போன்று வீக்கம் ஏற்படுவதை நரம்பணுத்திரள் வீக்கம் அல்லது நரம்பு முடிச்சு வீக்கம் என்கின்றனர். இது போன்ற வீக்கம் மணிக்கட்டின் மேல், கீழ் புறங்களில் அல்லது விரல் நடுவே கூட ஏற்படுகிறது. சிலர்க்கு பாதங்களில் கூட ஏற்படும்.

இது, சிலருக்கு சிறியளவில் தான் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு இந்த வலி மணிக்கட்டுப் பகுதியில் மட்டும் இருக்கும், சிலருக்கு விரல்கள் வழியே வலி ஊடுருவவது போன்ற உணர்வை அளிக்கும்.ஆங்கில மருத்துவத்தில் இந்த வீக்கத்தில் இருக்கும் திரவ சுரப்பியை நீக்க, வீக்கத்தை குறைக்க அறுவை சிகிச்சையை தான் கையாள்கின்றனர். இதை Ganglionectomy என்கின்றனர். ஆனால், இந்த சிகிச்சைக்கு பிறகும் வீக்கம் மீண்டும் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஹோமியோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சைக்கு பதிலாக குறிப்பிட்ட சில பிரத்தியோக மருந்துகள் மூலம் நிரந்தர தீர்வுக் காண முடியும் என கூறுகின்றனர். இதனால், வீக்கத்தை முழுமையாக குறைக்கலாம் என்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை நீங்களாக மற்றவர் சொல்லி பின்பற்ற வேண்டாம். தகுந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்து. கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares