இந்த உலகில் விலை மதிக்கவே முடியாதது குழந்தையின் புன்னகை தான். குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். , குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும். அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல்லை கேட்காதவர்கள் எனத் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது.
குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.
குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்தாலே நமக்கு நேரம் போவதும் தெரியாது. எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் குழந்தைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும். இங்கேயும் அப்படித்தான் ஒரு குழந்தை ஒரு செயலை செய்கிறது. நம்மையும் அறியாமல் மனம் அந்தக் குழந்தையின் மேல் லகித்துப் போய்விடுகிறது. அப்படி அந்தக்குழந்தை என்ன செய்கிறது எனக் கேட்கிறீர்களா?
சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற, பாட்டும் நானே பாவமும் நானே..என்னும் பாடலை செவ்வாலியே சிவாஜி கணேசனின் உடல்மொழியோடு பாடி அசத்துகிறது. அதிலும் குழந்தைகள் பொதுவாக இந்த காலத்து நடிகர், நடிகைகளின் பாடல்களை மனதில் வைத்து அச்சுபிசராமல் பாடுவது வழக்கமானதுதான். ஆனால் இந்தக் குழந்தை சிவாஜி கணேசன் பாடலை அச்சுபிசராமல் பாடி கவனம் குவித்துள்ளது. இதோ நீங்களே இந்தக் குட்டிமொட்டின் திறமையைப் பாருங்களேன். நீங்களும் வாழ்த்துவீர்கள்.