சப்பாத்திகள்ளி ; சப்பாத்திகள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும் நெருங்க விடாது.நாம் எப்படி அழகு ரோஜாவை எடுக்கும் போது முள் குத்துமோ, அதுபோல் இதில் நூறு மடங்கு முள் அதிகம் இருக்கும். அதனால் துரட்டிக் கொண்டு இந்த பழத்தை பறிக்கவும்.

இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிடமுடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முள்ளை போக்கவும்.பின் கவனமாக பழத்தை பிரித்தால் உள்ளே, நட்சத்திர வடிவில் தொண்டை முள் இருக்கும். அப்படியே சாப்பிட தொண்டையில் அந்த முள் சிக்கி அதிக சிரமத்தை தரும்.

அந்த தொண்டைமுள்ளை எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும், நல்ல சிவப்பு நிறமும் கலந்து இருக்கும்.

இதை சாப்பிட இதயம் சீராக துடிக்கும். ஆணுக்கு அனுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும். கருவுற்ற பெண்கள் இந்த பழம் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்துடனும், நல்ல கோபம், ரோசத்துடனும் இருக்கும். கற்றாழைப்பழம் ஆடு, மாடு மேய்பவர்கள் தான் அதிகம் சாப்பிடுவார்கள், மற்றவர்களுக்கு இந்த பழம் கிடைக்காது.இந்த பழம் சாப்பிட ஆண்மை அதிகரிக்கும். கருப்பை சுத்தம் ஆகும். நீர்கட்டி தானாக அழியும். எல்லோருக்கும் நல்லது செய்யும் பழம் இது.பகிருங்கள் பலருக்கும் பயன்படும்

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares