கண்கள் தொடர்பான பிரச்சினைகள் முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வரும். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் இளம் சிறார்கள் கூட கண் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மூக்கு கண்ணாடி அணிவதை காணமுடிகிறது.
கண்கள் தான் நம்மை இந்த உலகின் அழகை காண வழிவகுக்கிறது. அதுமட்டுமின்றி அழகான கண்கள் தான் முகத்திற்கு அழகும் கூட… ஆனால் இந்த கண்களின் ஆரோக்கியமும், அழகும் நாம் செய்யும் சில வேலைகளால் கெட்டு போகின்றன.
இரவு அதிக நேரம் கண்விழித்து இருப்பது, அதிக நேரம் டிவி, லேப்டாப் போன்றவற்றை காண்பது போன்றவை கண்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்க கூடியவையாகும். நீண்ட நேரம் தூங்காமல் இருந்தால் கண்களை சுற்றி கருவளையங்கள் உண்டாகின்றன.
தொடர்ந்து டிவி, செல்போன், கணினி போன்றவற்றை பார்த்துக் கொண்டே இருப்பது, உங்களது கண்களை வறட்சியடைய செய்து, கண்களில் எரிச்சல் உண்டாக காரணமாக உள்ளன. இந்த பகுதியில் பார்வையை மேம்படுத்தவும், பார்வை குறைபாடு வராமல் பாதுகாக்கவும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி காணலாம்.