தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான நடிகைகள் அறிமுகமாகி தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்தாலும் இவர்களுக்கு எல்லாம் மறைந்தும் இன்னமும் சிம்ம சொப்பனமாக இருந்து வருவதோடு பல இளசுகளின் கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை சில்க் ஸ்மிதா. இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு தனது இளமையான அழகு மற்றும் நடிப்பால் அனைவரையும் கட்டிபோட்டு

வைத்திருந்தார். இந்நிலையில் சில்க் ஸ்மிதா முதலில் பிரபல முன்னணி நடிகரான வினு சக்கரவர்த்தி மூலமாக வண்டி சக்கரம் படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகபடுத்தபட்டார். இதையடுத்து பதினேழு வருடங்களாக திரையுலகில் நடித்து வந்த சில்க் ஸ்மிதா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நானூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதனைதொடர்ந்து தயாரிப்பாளராக ஆசைப்பட்டு மூன்று படங்களை தயாரித்த நிலையில் அது பலத்த தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக பெரிதளவில் நஷ்டமடைந்த சில்க் ஸ்மிதா

மனதளவில் பாதிக்கபட்டு போதை பழக்கத்திற்கு அடிமையானார் முதலில் பாக்கு போடுவதில் ஆரம்பித்த பழக்கம் நாளடைவில் மதுவுக்கு மாறி இறுதியில் போதை ஊசி போட்டு கொள்ளும் அளவிற்கு சென்றது. இந்நிலையில் போதை ஊசி போடுவதற்கு என்றே ஒரு மருத்துவரை வைத்திருந்த நிலையில் அவருடன் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இதையடுத்து அந்த மருத்துவருக்கு இளம் வயதில் ஏற்கனவே மகன்

ஒருவர் இருந்த நிலையில் அவருக்கு சினிமாவில் மீது கொண்ட ஆர்வத்தால் அதை தெரிந்துகொண்ட சில்க் ஸ்மிதா அவருக்கு திரையுலகில் பல உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மகனுடன் சில்க் ஸ்மிதா நெருங்கி பழகுவதை பார்த்த மருத்துவருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இருவருக்கும் இடையில் பலத்த பிரச்சனை ஏற்பட தொடங்கியது. இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான சில்க் ஸ்மிதா தனது வாழ்க்கையை எதிர்பாரதவிதமாக தாமாகவே முடித்து கொண்டார்…….

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares