பொதுவாக அந்த காலத்தில் இருந்து இன்றளவு சினிமாவில் நடிக்கவரும் நடிகைகள் மத்தியில் அட்ஜஸ்ட்மென்ட் எனும் பழக்கம் மாறாமல் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில் இது குறித்து எந்தவொரு முன்னணி நடிகையும் வெளியில் சொல்லாமல் தயங்கி இருந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக மீடு சுசிலீக்ஸ் எனும் அமைப்புகளின் மூலமாக பல முன்னணி நடிகைகளும் தங்களுக்கு நடந்த பல இன்னல்களை வெளிப்படையாக கூறி
வருகின்றனர். அந்த வகையில் அந்த காலத்தில் இருந்து படங்களில் ஹீரோயினாக நடித்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதோடு தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தவித்து வரும் ஐஸ்வர்யா சமேபத்தில்
பேட்டி ஒன்றில் பேசுகையில் தனக்கு நடந்த பல இன்னல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். அதில் கடந்த 1991-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஊரெல்லாம் உன் பாட்டு இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்த நிலையில் இதில் கவுண்டமணி, செந்தில், வினு சக்கரவர்த்தி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர் மேலும் இந்த
படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா நடித்துள்ளார். இப்படி இருக்கையில் இந்த படத்தின் படபிடிப்பின் போது அங்கு ராமராஜனை பார்க்க அதிகளவில் ராமராஜனை பார்க்க அவரது ரசிகர்கள் வந்து விட்டார்கள் அதன் காரணமாக அந்த கூட்டத்தில் நான் மிகவும் சிரமப்பட்டு சென்று கொண்டிருந்த நிலையில் அந்த கூட்டத்தில் ஒருவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு ஐஸ்… வரீயா என நக்கலாக கேட்டார் என கூறியுள்ளார்…..