பொதுவாக ஒரு ராசியினருக்கு சனிபெயர்ச்சி வந்துவிட்டது என்றால் அவர்கள் செய்திருக்கும் நல்லது அடிப்படையிலேயே அவர்களுக்கு பலன்களை அள்ளிக் கொடுப்பார்.
அனைத்து ராசிகாரர்களும் ஒரு கட்டத்தில் ஏழரை சனியை கடந்து வரவேண்டியது என்பது உண்மையான ஒன்று. சனிபகவான் ராசி மாற்றம் அடைகின்றார் என்றாலே அனைத்து ராசியினருக்கும் பயம் தொற்றிக் கொள்ளும்.
அந்த அளவிற்கு சனி பெயர்ச்சியின் போது நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை, நாம் செய்த நல்ல விடயம், பாவங்கள் இவற்றினை அடிப்படையாக கொண்டே சனிபகவானும் அள்ளிக் கொடுப்பார் என்பதை யாரும் மறக்க வேண்டாம்.
வரும் புதிய ஆண்டில் ஜனவரி மாதம் 17ம் தேதி 30 ஆண்டுகக்கு பின்பு மூல திரிகோண ராசியில் நுழைவதால், சில ராசிகளுக்கு ஏழரை சனியின் தாக்கம் ஆரம்பித்துவிடும்.
தற்போது சனி பகவான் மகர ராசியில் இருக்கும் நிலையில், எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்க எழரை நாட்டு சனியின் தாக்கமும், கடகம் விருச்சிகம் ராசிகளுக்கு சனி தசையின் தாக்கமும் வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. துலாம், மிதுன ராசிகளுக்கு சனியின் தாக்கம் படிப்படியாக குறைவதுடன், தனுசு ராசியினர் அனுபவித்து வந்த துன்பங்கிலிருந்து விடுதலை பெறுவார்கள்.
இவ்வாறான சனி பெயர்ச்சியின் போது, சனி பகவானுக்கு பிடித்த எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை போன்றவற்றை தானமாக கொடுக்கலாம்.