ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து திருந்துகின்றனர்.
மேலும் இயற்கை வழி தான் சிறந்தது என்று உணர்ந்து, தற்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமென்று இன்டர்நெட்டில் தேடி அலைகின்றனர். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், அதன் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கவும் ஒருசில அருமையான மற்றும் அற்புதமான டிப்ஸ்களை கொடுத்துள்ளது.
அதைப் படித்து அதன்படி பின்பற்றி உங்கள் முடியைப் பாதுகாத்திடுங்கள்.குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களானது பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான். ஆண்களே! இதனை சரியாக பின்பற்றி வந்தால், தலை வழுக்கையாவதைத் தடுக்கலாம்.