உடல் எடை சீரான அளவில் இருப்பது மிக மிக முக்கியமானது. அதாவது ஒரு மனிதன் தன் உயரத்திற்கு ஏற்ற சராசரி எடையில் இருக்க வேண்டியது அவசியம். இந்த அளவுகோலை தாண்டி உடல் எடை இருப்பது பல்வேறு விதமான ஆபத்துகளை ஏற்படுத்தி விடும்.
இன்று கிடைத்துள்ள பல்வேறு மருத்துவ ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது இதுதான். அதிக அளவு உடல் எடை பல்வேறு வகையான நோய்களுக்கு அழைப்பு விடுக்கும் என்பதுவே அது.
சர்க்கரை வியாதி, இரத்தக் கொழுப்பு, இரத்த அழுத்தம் மற்றும் குழந்தையின்மை என உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அதனால் பலரும் பல விதமான வழிமுறைகளில் தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர். இதற்கு இயற்கை மற்றும் செயற்கையான வழிகள் உள்ளன. இருப்பினும் உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளே சிறந்தது. சரி வாருங்கள் ஒரே வாரத்தில் குண்டா இருக்கவங்க குச்சி போல மாறிடுவீங்க