பல் சொத்தை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவது. குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவு, பிஸ்கட், மிட்டாய், சாக்லேட்டு, ஐஸ்கிரீம், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள், பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியா இவற்றுடன் வினைபுரிந்து, லேக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம் பல்லின் வெளிப்பூச்சான எனாமலை அரித்துச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியா வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். புகைப்பிடிப்பது, வெற்றிலைப் பாக்குப் போடுவது போன்றவற்றால் பற்களில் கரை படியும். இதில் பாக்டீரியா குஷியாக வாழும். இந்த நிலைமை நீடித்தால், பற்களில் சொத்தை விழும்.

சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பற்களில் கறுப்புப் புள்ளி தெரியும். அங்கு குழி விழும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களும் பழுதாகிவிடும். நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும். அப்போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.

பல் இடைவெளிகளில் உணவுத் துகள்கள் தங்கினாலும், குச்சி, குண்டூசி போன்றவற்றால் பல் குத்தினாலும், கிருமித் தொற்று ஏற்பட்டு ஈறுகள் வீங்கி வலிக்கும். பல் துலக்கும்போது இந்த ஈறுகளிலிருந்து ரத்தம் கசியும். வாய் நாற்றம் ஏற்படும். பல் ஆட்டம் கண்டு விரைவில் விழுந்துவிடும். ‘பயோரியா’ என்று இதற்குப் பெயர். பற்களிலிருந்து பாக்டீரியா இதயத்துக்குப் பரவினால், இதய வால்வில் பிரச்சினை வரும் என்பது உண்மைதான்.

சரி வாருங்கள் 82 வயதிலும் பல் செட் வைக்க வேண்டாம் பல் விழுகாம இருக்க இதை செயுங்க !

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares