விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஏற்கனவே ஐந்து சீசன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த சீசனில் பெரும்பாலும் முகம் தெரிந்த நபர்கள்தான் அதிகமாக உள்ளனர்.
அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சென்றிருக்கும் சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா சிறப்பாக விளையாடி வருகிறார். சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்கும் போது இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ரக்ஷிதாவை ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து இம்சை செய்து கொண்டு இருக்கிறார். ரக்ஷிதா திருமணமாகி சில கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ரக்ஷிதா திருமணமானவர் என்பதை அறிந்தும் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து அவரை தொந்தரவு செய்து கொண்டு வருகிறார். இதனால் ரக்ஷிதா அவரை அண்ணன் என்று கூப்பிட்டார்.
ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதா தான் என்னுடைய கிரஷ் என்று கூறி வருகிறார். இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் ஒரு படி கீழே சென்று ரக்ஷிதாவை கட்டி அணைக்க நெருங்கினார். அதை பார்த்து ரக்ஷிதா கைகள் வெட்டப்படும் என்று கூறினாரே தவிர கோபம் காட்டவில்லை.
ஒருவேளை அவரின் நட்பு போய் விடுமோ என்ற பயத்தில் இவர் எப்படி நடந்து கொள்கிறாரா, ராபர்ட் மாஸ்டர் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் எதற்கும் ஒரு பொறுமை உண்டு. ரக்ஷிதா எப்போது எரிமலையாக வெடிக்க போகிறார் என்பது தெரியவில்லை.