வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது இதையடுத்து அந்த தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் தங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர். இந்நிலையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்
பாக்கியலட்சுமி இந்த தொடரில் அம்ரிதா எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல சீரியல் நடிகை ரித்விகா. இந்நிலையில் இவர் இந்த சீரியலில் நடித்து பிரபலமானதை காட்டிலும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமானதே அதிகம் எனலாம். இவ்வாறு இருக்கையில் ரித்விகா விஜய் டிவியில் பல முன்னணி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பிசியாக கலந்து கொண்டு வரும்

நிலையில் அவருக்கு இந்த மாத இறுதியில் திருமணம் நடக்க இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது . இது குறித்து கேட்கையில் ரித்விகா விஜய் டிவியில் கிரியேடிவ் டைரக்டராக இருக்கும் வினு என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அவர்களது திருமணம் வரவேற்பு நவம்பர் மாதம் 27-ம் தேதி நடக்கவுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே அவர்களது திருமணம் இருவீட்டார்

முன்னிலையில் நடக்க இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் இருவரும் ஒரே சேனலில் வேலை செய்து வரும் நிலையில் நிச்சயம் இது காதல் திருமணமாக தான் இருக்ககூடும் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த தகவல்கள் அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் வெளியாகி செம வைரலாகி வருகிறது….

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares