விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே ஐந்து சீசன்களை வெற்றிகரமாக முடித்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன்களை ஐந்து சீசன்களை காட்டிலும் மிகவும் விறுவிறுப்பாக கொண்டு சென்று வருகிறார்கள். இதில் 10 ஆண் போட்டியாளர்கள், 10 பெண் போட்டியாளர்கள் ஒரு திருநங்கை என்று 21 பேர் கலந்து கொண்ட நிலையில் நான்கு பேர் ஏற்கனவே எலிமினேட் ஆகிவிட்டார்கள்.
மீதமுள்ள 17 பேர் விளையாடி வருகிறார்கள். இதில் சின்னத்திரை நடிகை ரட்சிதா கலந்து கொண்டுள்ளார். இவருக்கும் ராபர்ட் மாஸ்டர்க்கும் ஏதோ ஒரு கனெக்ஷன் உள்ளது என்று பலரும் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக மீம்ஸ்களும் ரீல்ஸ்களும் வெளியாகி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் ராபர்ட் மாஸ்டரும் தொடர்ச்சியாக ரட்சிதா பின்னாலயே சுற்றி வருகிறார்கள்.
கடந்த வாரம் நீங்கள் என் நண்பர் மட்டுமே என்பதை ரட்சிதா பொறுமையாக புரிய வைத்தும் அவர் மாறாதது பெரிய கஷ்டத்தை கொடுத்தது ரட்சிதாவிற்கு, இந்த வார எபிசோட் ஒன்றில் ரட்சிதாவின் கையைப் பிடித்துக் கொண்டு முத்தம் கொடு என்று ராபர்ட் கேட்டது பலரிடையே கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று திருமணமான ஒரு பெண்ணிடம் நடந்து கொள்வது மிகவும் தவறானது என்று பலரும் கூறி வருகிறார்கள். அந்த வகையில் ரட்சிதாவின் கணவரும் நடிகருமான தினேஷ் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ரட்சிதா ஆட்டத்தை இவர் கெடுக்க நினைத்தால் ராபர்ட் மாஸ்டருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று நிர்வாகத்திடம் முறையீடு செய்ய உள்ளேன் என்று அவர் கூறியதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.