2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மேஷ ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.

ஜனவரி மாதம் முதல் குருவின் பயணம் மற்றும் பார்வைகளால் யாருக்கெல்லாம் நல்ல வேலை கிடைக்கும்

வேலை பறிபோகாமல் தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

2023 இல் குறி வைத்திருக்கும் குரு பெயர்ச்சி! யார் யாருக்கு ஆபத்து? | Guru Peyarchi 2023 Tamil

மேஷம் 2023ஆம் ஆண்டு மே மாதம் ராசிக்கு வரப்போகும் ஜென்ம குரு இடமாற்றத்தை தருவார். குருவின் செயல்பாடு சந்தோஷத்தையும், அதிக லாபத்தையும் கொடுக்கும்.

ரிஷபம் மே மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் பணவரவு நன்றாக இருக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். குரு பகவானின் பார்வை உங்களுடைய ராசிக்கு சாதகமான இடங்களில் விழுகிறது என்றாலும் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.

மிதுனம் நிகழப்போகும் குரு பெயர்ச்சி உங்களுக்கு குதூகலத்தை கொடுக்கப் போகிறது. லாப குருவினால் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சொத்து சேர்க்கை ஏற்படும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு ராஜ யோகத்தை தரப்போகிறது.

கடகம் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். இடமாற்றங்கள் ஏற்படும். வீடு நிலம் வாங்கலாம்.

சிம்மம் குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. உங்களுக்கு வீடு வாங்கும் யோகமும் வாகனம் வாங்கும் யோகமும் கைகூடி வரும். மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார்.

கன்னி குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குரு பகவான்அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

துலாம் குருவின் பார்வையால் உங்களுக்கு தொழில் மாற்றமும் வேலையில் நல்ல இடமாற்றமும் ஏற்படும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.

விருச்சிகம் பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். குரு பகவானால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களுக்கு பண வருமானமும் அதிகரிக்கும்.

தனுசு 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் குருவின் பார்வையால் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும்.

மகரம் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்குரு பகவானால் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம் ஜென்ம குரு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரப்போகிறார். . மே மாதத்தில் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கிடைக்கப்போகிறாது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares