நமது சருமத்திற்கும் முடிக்கும் நிறத்தைக் கொடுக்கும் மெலனின் (Melanin) என்னும் சுரப்புக் குறைவதே அடிப்படைக் காரணம். இந்த மெலனின் சுரப்பு குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இளநரையை நீக்கிக் கொள்ளலாம். ஆனால் முதுமையில் வரும் நரையை தள்ளிப் போடலாம். அதை முற்றிலும் நீக்குவது என்பது முடியாத விசயம்.
மனக்கவலை, நிம்மதியின்மை, தூக்கமின்மை மன இறுக்கம் திடீர் அதிர்ச்சி ஓயாத சிந்தனை கடின உழைப்பு மிதமிஞ்சிய ஆசைகள், தனது நோக்கம் நிறைவேறாத ஏக்கம், மனவெறுப்பு, சதா கவலை இது போன்ற மன இயல்கூறுகளும் இள நரையை விரைவில் உண்டாக்கி விடும்.
இளநரையை பித்த நரை என்றும் சொல்வதைக் கேட்கிறோம். பித்த ஆதிக்கம் உள்ள உணவுகளை அதிகமாக உண்பதாலும் வைட்டமின் ‘B’ சத்து அல்லது ‘K’ சத்து குறைவதாலும் உவர்ப்பு, காரம், புளிப்பு பதார்த்தங்களை மிதமிஞ்சி உண்பதாலும் தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரப்பதாலும் இளநரை ஊக்குவிக்கப்படுகிறது எனலாம்.
உப்புத் தண்ணீரில் குளிப்பதாலும், தலைக்கு சரியாக எண்ணெயிட்டு பராமரிக்காததாலும் இளநரை ஏற்படும். பொதுவாக வெயிலில் வேலை செய்பவர்களுக்கு நரை விரைவில் வராது. ஆனால் நிழலில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு விரைவில் நரை வருவதை அனுபவப்பூர்வமாக அறியலாம். சரி வாருங்கள் இளநரை,100 வயது ஆனாலும் ஒரு முடி நரைக்காமல் இருக்க இந்த பொடி எண்ணையுடன் தலையில் தடவுங்க.