கேரளத்து பெண்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது, நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் தான். அதுமட்டுமின்றி, அவர்களின் கன்னங்கள் நன்கு கொழுகொழுவென்று இருக்கும். இதற்கு அவர்களின் அழகு பராமரிப்பு தான் காரணம்.
மேலும், இவர்கள் எக்காரணம் கொண்டும் கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தமாட்டார்கள். எதற்கும் இயற்கைப் பொருட்களையே நாடுவார்கள். அதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பருக்களும் இல்லாமல் பளிச்சென்று உள்ளது.
அதை பார்ப்பதற்கே நமக்கு ஆச்சரியமாகவும், ஏக்கமாகவும் கூட இருக்கும். உண்மையில் இவர்கள் தங்களது கூந்தலுக்கு அதிகம் பணம் செலவழிப்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தான் அழகாக வைத்து கொண்டனர்.
கேரளா பெண்களின் அழகின் ரகசியம் கேள்வி பட்டிருப்பீங்க! கேரளா பெண்களின் கூந்தல் ரகசியம் பத்தி தெரியுமா?? தற்போது கேரளா பெண்களின் கூந்தலுக்கு என்ன பொருட்கள் காரணம் என்று தெரிந்து கொள்வோம்.