இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். இளமையின் ஒரு கட்டத்தில் ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் இணைந்து, குழந்தை செல்வத்தை பெற்று வாழ்வதே ஒரு முழுமையான இல்லற வாழ்வு வாழ்வதற்கு அர்த்தமாகும். அதிலும் இக்காலத்தில் பிள்ளைப்பேறு கிட்டாத தம்பதிகள் அதிகரித்து வருகின்றனர். இதற்கு ஆண் மற்றும் பெண் இருவரின் உடல் குறைபாடுகள் காரணமாக இருக்கிறது. அப்படி அதிகளவு ஆண்களை பாதிக்கும் ஒரு குறைபாடு தான் ஆண்மை குறைவு. ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் ஆண்மை குறைபாடு நீங்க மருத்துவ குறிப்புகள் பற்றி காண்போம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண் மை குறைவு இன்று அதிகளவில் ஆண்களுக்கு ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அதில் பிரதானமாக இருப்பது, ஆண்களின் மனதில் ஏற்படும் வீண் பயங்கள் மற்றும் பதட்டங்கள் தான். இந்த பயம் மற்றும் பதட்டம் காரணமாக அவர்களின் உடலின் முக்கிய நரம்புகள் தளர்ந்து, ஆண்மை குறைவை உண்டாக்குகிறது. மேலும் சத்தான உணவுகளை உண்ணாதது, இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருந்தல், மற்றும் மன அழுத்தங்களும் ஆண்மை குறைவு ஏற்பட முக்கிய காரணங்களாக இருக்கிறது.

ஆண்மை குறைபாடு இருக்கும் நபரிடம் எப்போதும் ஒரு வகையான படபடப்புத்தன்மை இருக்கும்.எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் சுலபத்தில் சோர்ந்து போவார்கள். ஆண்மை குறைபாடு தீவிர நிலையில் இருப்பவர்களுக்கு கைகள் மற்றும் கால்களில் நடுக்கம் இருக்கும் மற்றும் மனதில் தாழ்வு மனப்பான்மை உருவாகும். வெண்ணை, கட்டி தயிர் மற்றும் பேரீச்சம் பழம் இம்மூன்றையும் சேர்த்து குழைத்து, தினமும் காலையில் சாப்பிட்டு வர, ஆண்மை குறைவு நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.

முருங்கை மரத்தின் பிசினை எடுத்து, நிழலில் காயவைத்து உலர்த்தி, நன்கு பொடித்து சூடான பசும்பாலில் கலந்து தினமும் காலையும், மாலையும் குடித்து வர ஆண்மை குறைவு நீங்கும். தினமும் காலையில் இரண்டு செவ்வாழைப்பழத்தை சுத்தமான தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நீங்கும். புலால் உணவுகளில் மற்ற எல்லாவற்றையும் விட நாட்டு கோழியின் முட்டைகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது

தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும் இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.

அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் உண்டு.

அது பற்றி மிக விரிவாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares