சத்தியா என்ற புகழோடு விளங்கும் ஆயிஷா தற்போது பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார். அவருடன் நெருக்கமாக இருந்த தோழி ஷெரினா வெளியேறியதும் சற்று குழப்பமடைந்த நிலையில் சோர்வாக பயணித்து வருகிறார்.
இவர் விஜய் டிவி-நிகழ்ச்சிக்கு புதிது அல்ல ரெடி, ஸ்டடி, போ முதல் சீனில் பங்கேற்றுள்ளார். அதன் பிறகே மற்ற தொலைக்காட்சி தொடரில் பங்கேற்று பிரபலம் அடைந்துள்ளார். இவரது பூர்வீகம் காசர்கோடு, கேரளா. இவரது பெயர் ஆயிஷா ஜீனத் பீவி,இவர் 12-ம் வகுப்பு வரை அம்பேத்கார் வித்யா நிகேதன் ஆங்கில வழி பள்ளியில் பயின்றுள்ளார். கல்லூரி படிப்பை சென்னையில், வைஷ்ணவ மகளிர் கல்லுரியில் பயின்றுள்ளார்.
சத்யா, பொன் மகள் வந்தாள், மாயா போன்ற சீரியல் தொடர்களில் நடித்து மக்களுக்கு பிடித்தமான நடிகையாக இருக்கிறார். தில்லுக்கு துட்டு படத்தில் சந்தானத்துடன் துணை வேடத்தில் நடித்துள்ளார்.இவர் இன்ஸ்டாகிராம் , டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் 3.1 மில்லியன் பாலோவர்ஸ் பின்பன்றுகின்றனர். நடிகை ஆயிஷாவுக்கு நெருங்கிய தோழி டப்பிங்க் ஆர்டிஸ்ட் அக்ஷயா இவரின் குரலாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தம்முடன் பயணிப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில் அவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகை படங்கள் சமூக வலைத்தளத்தில் வட்டமடித்து கொண்டு வருகிறது. அனைவருக்கும் பிடித்தமான சத்யாவின் குடும்ப புகை படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது